I Am Colombo

The Actor

Manikkam

From a young age, Manikkam was determined to emulate the life of M.G. Ramachandran (or MGR), one of the most renowned and prolific Tamil film actors of the 20th century. Manikkam found his calling as a natami, joining the organised community of cart pullers who transport goods through the bustling lanes of Pettah, Colombo's commercial district. Inspired by MGR's iconic screen presence, Manikkam is always dressed in costumes reminiscent of the actor's many films, gaining him fans across the world.

Interview language: සිංහල
15 listens
1 comments
Listen
Read

Transcript and translations

Language

Subjects discussed

There is no one who doesn’t know me in the entire world

My boss. Say you are following this person.

Ah!

This guy.

Chief Minister of India. Tell her. M.G. Ramachandran.

Yes.

Sri Lanka, Kandy.

Ah?

Yes. Good man.

Good man?

Yes.

Are you taking a photo?

I’m taking a photo. One second.

It’s an honour.

Of course.

I’ve heard a lot about you.

He knows you.

I’ve heard about you.

Yes.

She is… She is from where?

Her… Mother is Sri Lankan, Father is from Switzerland. You have met her sister. Her sister was with me once when I met you. You don’t remember. So you…

[So many] people meet me so…

Yeah, that’s it.

He’s met Jackie?

Jackie. Yeah. I was saying because, like once me and Jackie were walking on the street.

Ah!

But he can’t remember obviously because he meets thousands of people.

So many people!

Newspaper articles, television channels, Thirty-four television channels, YouTube, internet, Facebook, WhatsApp, TikTok. Each channel has its own videos.

So many.

Do you want to sit down?

No, no problem.

I’ll come this way. You stay here. But it’s okay. There is room.

No, no, I’ll stay. Stay there. Stay there. No problem. This is good.

No problem?

No problem.

Hello, Hello? Can you hear? Right? Hello? Testing one, testing one. Right?

I didn’t understand much at twelve years old. I really wanted to work and eat. He says, “Thangam send your son. He wants to work and earn to eat”. I try to pull carts. I can’t pull. He won’t let me. Then flour is being loaded. They were fifty kilo bags. He is the one who pulls. I’m going behind. He gave me two rupees or a rupee and fifty cents. Big money then. Then he told our mother, “It’s like this, look someday your son will be working in a good way, and will come up nicely on the pavements.” Those words rang true for me. And our mother said “Son, when I’m gone, when father’s gone, the whole world will recognise you and accept you”.

Our mother had pictures of the Nawala deity. When she told us to worship, we did. We both were small after all. There is also a photo of M.G.R. My boss. She puts a pottu on him and tell me to worship. That’s when I said “Mother,” I said “Who is that?” When asked, my mother says “He is M.G.R. uncle. Not only for you but he is M.G.R. Uncle to the world. Worship him.” I worshipped for about a month straight, then started crying once, holding our mother’s sari, rolling around. They gave me food, tea, biscuits. I don’t eat anything. I keep crying. When asked why, I said “Show me M.G.R. uncle.” I thought he lived next door. Right? Our father, back then there were rickshaws, he comes in rickshaws wearing white sarongs and shirts like this. “What is the little one crying about?” “No, look. He is crying and telling us to show him M.G.R. uncle.” “Shall I take him to India?” When we say “what what” our mother says to our father, I remember like today, “Are you crazy to say you’ll take him to India?” “No, they have brought an M.G.R. picture (film).” Cinema is in front of our house. ‘Raman Thediya Seethai.’ They took me to see that film. Then they showed my boss and I laughed happily. I laughed so hard. Our mother gets concerned and asks my father, “Why is this child laughing like this?” “He’s laughing because he’s happy. We showed him M.G.R. He is a good man, M.G.R.“ he said. It was then that I promised myself: if I live, I want to live like him.

[SINGS ‘THIRUDADE PAPA THIRUDADE’ FROM THE MOVIE THIRUDADE (1961)]

This is how I live my life. I have 180 suit coats. There are 2300 shoes. There are 3800 ties. I’m the only one wearing the American tie in the world. Not even Mr. Gotabhaya Rajapaksa wore it. I have an American…

Then, tell me a little about how did you became famous?

While I’m dressed like this, it was Swarnavahini TV that first captured me on video. Mr. Bandula.

When was that?

It has been seven years now. It’s been seven or eight. The first video, they have come looking for me, just like you. Like, since you saw me on the first day. Like that. After that, he saw me with my cart at Gaspaha Junction. “Hello sir! I remembered you. We have a shooting with you.” He told me and recorded a video. That’s where I first spoke about smoking cigarettes. That’s what I said first. As soon as that video was shown on TV all the channels came running with a camera. I.T.N., Rupavahini, Derana. It was heavy rain. I’m going home. All three were outside my home. And I’ve been on thirty TV channels, YouTube, internet, Facebook, WhatsApp, Ada Newspaper, The Island, Weerakesari, Mithran, World. World meaning the whole world. I’m in the entire world. There is no man who does not know me. Germany, Canada, Pakistan, London, Singapore, America, Russia, China, Dubai, Uganda. From there, they come to find me after watching my videos. They send me money. Belts, shoes, sunglasses, everything is sent.

His film is natural. The truth. No lies. All the others are duplicates. He lived…

Are you watching my videos?

When everything goes across the world, the world today says, “We have never seen anyone like this.” Old timers, mothers, fathers [say] “In our time, wearing a sarong, a shirt, drenched in sweat without a shirt, bearded, is how a Nattami works. What is this, wearing a white suit? A white suit coat is worn for a function, a wedding. School kids wear white shirts, trousers. He is a Nattami. He won’t get dirty. He leaves looking better than when he came. Working in the rain, even in heavy rain. Doesn’t get mud on his shoes. Shouldering the work, unloading the goods, putting them in the lorry. Wow… he has a thing about him.” People, all over the world, are thinking. Now I am the one wearing the suit and coat from everyone in the world. Even while working M.G.R. Aiya [Elder Brother], M.G.R. Aiya, M.G.R. Aiya, they shout and wave. In the bus, in the car, in the van, on the bike. Just today, I was in more than twenty selfies.

This is the cloth brought for sewing. I have separate measurements to sew those buttons.

Ah.

That is sent to another place.

Ah, okay, okay.

There is no one who doesn’t know me in the entire world

There is no one who doesn’t know me in the entire world

இவர்தான் என் தலைவர்.

நான் இவற்ற வழியிலதான் நடக்கிறன்.

இவரப் பாருங்கோ. இவர்தான் தமிழ்நாட்டு முதலமைச்சர். எம். ஜி. ராமச்சந்திரன்.

இவர் பிறந்தது இலங்கை, கண்டியிலதான்.

நல்ல மனிதர்.

நல்ல மனிதரா?

ஓம்.

நீங்கள் படம் எடுக்கிறீங்களா?

நான் படம் எடுக்கிறேன். ஒரு நிமிசம் பொறுங்கோ.

எனக்கு இது பெருமை.

உண்மைதான்.

உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவருக்கு உங்களைத் தெரியும்.

ஓம்.

இவா…இவா எந்த இடம்?

இவாட அம்மா இலங்கை, அப்பா சுவிஸ். இவாட அக்காவை நீங்கள் சந்திச்சிருக்கிறீங்கள்.

நான் ஒருக்கா உங்களை சந்திச்ச போது அவவும் வந்திருந்தா. உங்களுக்கு நினைவில்லையா?

மிச்சம் பேர் என்னை சந்திக்கிறதால சரியா நினைவில்லை.

ஜக்கியை சந்திச்சிருக்கிறாரா?

ஓம். ஒருமுறை, நானும் ஜக்கியும் வீதியில் போகும்போது இவரைச் சந்தித்தோம்.

அப்பிடியா?

ஓம். ஆனால் அவருக்கு நினைவில்லை. ஆயிரம் பேரைச் சந்திக்கிறார். நினைவிருக்காதுதானே?

நிறயப் பேர்.

இருங்கோவன்?

இல்லை, பரவாயில்லை.

ஆ இந்தப் பக்கம் வாறன். நீங்கள் இங்க இருங்கோ. இங்க இடம் இருக்கு. பரவாயில்லை.

பிரச்சினையில்லையே?

பிரச்சினை இல்லை.

ஹலோ, ஹலோ. கேக்குதா? மைக் டெஸ்டிங் வன்! டெஸ்டிங் வன். சரியா?

பன்னிரண்டு வயசில எனக்கு சரியா விளங்கேல்ல. எனக்கு உழைக்கோணும், சாப்பிடோணும். அவர் சொன்னார் “தங்கம் உன்ர மகனை என்னட்ட அனுப்பு. அவனுக்கு உழைச்சுச் சாப்பிட வேணுமாம்”. நான் வண்டில் இழுத்துப் பார்த்தன். என்னால இழுக்க முடியல. அவர் விடமாட்டார். பிறகு மா மூட்டை ஏத்திறது. ஒரு மூட்டை ஐம்பது கிலோ. அவர்தான் இழுப்பார். நான் பின்னால போவன். அவர் எனக்கு இரண்டு ரூபா அல்லது ஒரு ரூபா ஐம்பது சதம் தருவார். அப்ப அது பெரிய காசு. அவர் என்ர அம்மாக்கு சொல்லுவார், ” பார் ஒருநாள் உன்ர மகன் நல்லா உழைச்சு, பெரியாளா இந்த ரோட்டில வருவான்”. அது பலிச்சிட்டுது. அம்மா சொன்னா ” மகனே, நான் போனபிறகு, உன்ர அப்பாவும் போனபிறகு இந்த உலகம் உன்னை மதிக்கும் , ஏற்றுக்கொள்ளும்”.

எங்கட அம்மாட்ட நாவல தெய்வத்தின்ற படம் இருந்தது. அவா கும்பிடச்சொன்னா, நாங்கள் கும்பிட்டம். நாங்கள் இரண்டு பேரும் அப்ப சின்னப் பிள்ளையள். அப்ப எம்.ஜி.ஆர் படம் ஒண்டும் இருந்தது. என்னோட தலைவர். அவா, அதுக்கு ஒரு பொட்டு வைச்சு, கும்பிடு எண்டு சொன்னா. நான் “அம்மா இது யார்?” எண்டு கேட்டன். அம்மா சொன்னா, இவர்தான் எம்.ஜி. ஆர் மாமா. உனக்கு மட்டுமில்ல, உலகத்துக்கே இவர்தான் எம்.ஜி.ஆர் மாமா. கும்பிடு”. நான் ஒரு மாசம் விடாமத் தொடர்ந்து கும்பிட்டன். ஒருநாள் அம்மாட சீலையைப் பிடிச்சுக்கொண்டு அழத் தொடங்கீட்டன். எனக்கு சாப்பாடு, பிஸ்கட், டீ எல்லாம் தந்தினம். நான் ஒண்டையும் சாப்பிடேல்லை. அழுதுகொண்டே இருந்தன். ஏன் எண்டு கேக்க, “எம்.ஜி.ஆர் மாமாவைக் காட்டுங்கோ” எண்டன். நான் நினைச்சன் அவர் பக்கத்துக்கு வீட்டிலதான் இருக்கிறார் எண்டு. சரியா? எங்கட அப்பா, அந்த நாளில வெள்ளை சாரம், சேட்டுப் போட்டு ரிக்க்ஷாவில் வருவார். நான் ஏன் அழுகிறேன் என்று கேட்டார். “அவனுக்கு எம்.ஜி.ஆரை பார்க்கோணுமாம்”. “நான் அவனை இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போகட்டே?” . அம்மா ” உங்களுக்கு பைத்தியமே?” எண்டு கேட்டா. எனக்கு இண்டைக்கு மாதிரிக் கிடக்கு. “இல்லை எம்.ஜி.ஆர். படம் ஒண்டு வந்திருக்கு”. தியேட்டர் எங்கட வீட்டுக்கு முன்னாலதான் இருந்தது. ராமன் தேடிய சீதை படம். என்னை படம் பாக்க கூடிக்கொண்டு போனவை. என்ற தலைவரைப் பார்த்தோண நான் சிரிக்கத் தொடங்கிட்டன். நிக்காம சிரிக்கிறேன். அம்மா பயந்துபோய் “ஏன் இந்தப்பிள்ளை இப்பிடிச் சிரிக்குது?” எண்டு அப்பாவைக் கேட்டா. “நாங்கள் எம்.ஜி.ஆரை காட்டினோம். அதான் சந்தோஷத்தில சிரிக்கிறான். எம்.ஜி.ஆர் நல்ல மனுசன்.” எண்டார் அப்பா. அண்டைக்கு நான் மனசில நினைச்சுக்கொண்டன். வாழ்ந்தா எம்.ஜி.ஆர் மாதிரி வாழோணும்.

இப்பிடித்தான் நான் வாழுறன். 180 கோட் சூட் இருக்கு. 2300 சப்பாத்து. 3800 டை. உலகத்திலேயே அமெரிக்கன் டை கட்டுறது நான் ஒருத்தன்தான். கோத்தபாய ராஜபக்சவே கட்டினதில்ல. என்னட்ட இருக்கு.

“எப்பிடி பிரபலமா ஆனீங்க?”

நான் இப்பிடி வெளிக்கிட்டுத் திரியேக்க ஸ்வர்ணவாஹினி டீவி என்னை முதலில வீடியோ எடுத்தவை. திரு பந்துல.

எப்ப அது?

ஏழு வருசமாச்சு. ஏழோ எட்டு வருசம். முதல் வீடியோவுக்கு, அவையள் என்னைத் தேடி வந்தவை. உங்களை மாதிரித்தான். நீங்கள் என்னை முதல்நாள் கண்டமாதிரி. அதுக்குப் பிறகு அவர் நான் என்ற வண்டிலோட கஸ்பகா சந்தியில் நிக்கேக்க கண்டவர். “வணக்கம் சேர். எனக்கு உங்களை ஞாபகம் இருக்கு. உங்களை படம் பிடிக்கப் போறம்” எண்டு சொல்லி வீடியோ எடுத்தவர். அங்கதான் நான் முதல்தரம் புகைப்பிடிக்கிறதை பற்றிப் பேசினான். அதுதான் முதலில் சொன்னான். அந்த வீடியோ ஒளிபரப்பானதும், எல்லா சானலும் காமராவோட வந்திட்டினம். ஐ.ரி.என், ரூபவாஹினி, தேரென. அண்டைக்கு நல்ல மழை .  நான் வீட்ட போறன். மூன்று சானலும் வீடு வாசலிலே நிக்கினம். இதுவரைக்கும் நான் 30 சானலில், யூ டியூப், இணையம், முகநூல், வாட்சப், அத பேப்பர், ஐலண்ட், வீரகேசரி, மித்திரன், உலகம். உலகமெண்டா இந்த முழு உலகமும்.  நான் உலகம் முழுக்க இருக்கிறன். இந்த உலகத்தில என்னத் தெரியாத மனுசர் கிடையாது. ஜேர்மனி, கனடா, பாகிஸ்தான், லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா, ரசியா, சீனா, டுபாய், உகண்டா. அங்க இருந்து, என்ற வீடியோ பாத்திட்டு என்னை பார்க்க வருவினம். எனக்கு காசு அனுப்புவினம். இடுப்பு பட்டி, சப்பாத்து, கண்ணாடி, எல்லாம் அனுப்பி இருக்கினம்.

அவற்ற படங்கள் இயல்பானவை. உண்மையானவை. பொய்யில்லை. மற்றவையெல்லாம் போலி. அவர் அப்பிடி வாழ்ந்தார்.

என்ற வீடியோக்கள் பாக்கிறநீங்களோ?

வீடியோக்களை பாத்திட்டு, உலகம் “நாங்கள் ஒருகாலமும் இப்பிடி ஒருத்தரைப் பார்த்ததில்லை” எண்டு சொல்லுது. பழையாக்கள், அம்மா அப்பாமார் சொல்லுவினம், “எங்கட காலத்தில சாரமும், வேர்வை ஊறின சேட்டும் தாடியும் இல்லாட்டி வெறும் மேலோடதான் நாட்டாமை வேலை செய்வார். இதென்ன வெள்ளை சூட் போட்டுக்கொண்டு. ஒரு விழாவுக்கு, கலியாணத்துக்குப் போடவேண்டியது அது. “

பள்ளிகூடப் பிள்ளையள் வெள்ளை சேட், காற்சட்டை போடுதுகள். அவர் ஒரு நாட்டாமை. அவர் அழுக்காக மாட்டார். அவர் போகேக்க வந்ததைவிட அழகாய்ப் போவார். மழையில, கடும் மழையில வேலை செய்தாலும் அழுக்குப் படாது. அவற்ற சப்பாத்துக் கூட ஊத்தையாகாது. மூட்டை சுமந்து, சாமான் இறக்கி, வாக்கத்தில ஏத்தி. அவரில ஒரு விஷயம் இருக்கு. இப்ப உலகத்திலேயே நான்தான் சூட் போட்டிருக்கிறன் போல கிடக்கு. வேலை செய்யேக்கயும் எம்.ஜி.ஆர் ஐயா, எம்.ஜி.ஆர் ஐயா, எம்.ஜி.ஆர் ஐயா எண்டு கத்தீனம். காய் காட்டீனம். பஸ்ஸில, கார்ல, மோட்டார் சைக்கிளில். இண்டைக்கு மட்டும் நான் ஒரு இருபது செல்பியில இருந்திருப்பன்.

இது தைக்க வாங்கின துணி. இந்த பொத்தான் தைக்கிறதுக்கு வேறை அளவு இருக்கு.

ஓ.

இது வேறை இடத்துக்கு அனுப்பவோ?

ஆ, சரி சரி. 

About this portrait

Interviewer: Abdul Halik Azeez
Photographer: Abdul Halik Azeez
Translator (Sinhala): Dilina Amaruwan
Translator (Tamil): Ketharasarma Ledchumanasarma
Recorded: December 11, 2022
First published: November 7, 2023
Last edited: November 7, 2023

Comments

  1. Abdul Halik Azeez
    August 25, 2023 at 06:24 pm
    My fascination with Manikkam originates from my interest in MG Ramachandran. During my childhood, I was surrounded by the melodies of his movies, along with other Tamil films, which were constantly humming, playing, or being watched in our household. What intrigued me further was the fact that MGR was also born in Sri Lanka, in the same town as my grandfather, and in the very same year. As I delved into exploring the cultural transformations of Muslims in Sri Lanka, a subject that I closely examine as an artist, the persona of MGR seemed to embody a transient moment in the imaginative aspirations of young Muslim men from that era, fading into the shadows, but potentially lingering on. MGR, the actor-politician, has wielded a remarkable influence on the construction of masculine self-perception among a considerable segment of Tamil-speaking Sri Lankans who reached maturity during the mid-20th century. Within this context, Manikkam (also known as the “Pettah MGR”) stands as a living embodiment of this extraordinary phenomenon.

Leave a comment

Comments are moderated. Please read our submission guidelines before you comment. Comments that do not adhere to the guidelines will be edited or deleted.